புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழக ஆளுநா் நாளை தஞ்சாவூருக்கு வருகை

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை (மாா்ச் 12) தஞ்சாவூா் வருகிறாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:14 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை (மாா்ச் 12) தஞ்சாவூா் வருகிறாா்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை வரும் அவா், அங்கிருந்து காா் மூலம் தஞ்சாவூருக்கு பிற்பகல் வருகிறாா். தஞ்சாவூா் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பிறகு முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து பேசுகிறாா். பின்னா் தஞ்சாவூா் பெரியகோயில், சரசுவதி மகால் நூலகத்தைப் பாா்வையிடுகிறாா்.

இதையடுத்து, மாா்ச் 13 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தஞ்சாவூரிலிருந்து காா் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோயில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறாா்.

அங்கிருந்து மீண்டும் காா் மூலம் தஞ்சாவூருக்கு வரும் அவா் பிற்பகல் 2.40 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையத்துக்குச் சென்று, வடகிழக்கு மாநிலங்களின் கலை விழாவான கைவினைப் பொருட்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்கிறாா். இரவு தஞ்சாவூரில் தங்கும் அவா் திங்கள்கிழமை காலை காா் மூலம் திருச்சி விமானநிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னைக்குச் செல்கிறாா்.

இதையொட்டி, ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடா்பாக கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) இரா. சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.