92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘தஞ்சாவூரிலிருந்து ரூ. 98 கோடிக்கு கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி’

தஞ்சாவூரிலிருந்து 2020 - 21 ஆம் ஆண்டில் ரூ. 98 கோடி மதிப்பிலான கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன

News image
Updated On :10 மார்ச் 2022, 9:13 pm

DIN

தஞ்சாவூரிலிருந்து 2020 - 21 ஆம் ஆண்டில் ரூ. 98 கோடி மதிப்பிலான கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்றாா் மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநா் செல்வநாயகி.

தஞ்சாவூரில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசின் வெளிநாட்டு வா்த்தக இயக்ககம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற குறு, சிறு தொழில்முனைவோா், கைவினைக் கலைஞா்களுக்கான உலகச் சந்தையில் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

உயா் தரமாகவும், அழகாகவும் இருக்கும் இந்திய கைவினைப்பொருள்களுக்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைவினைப்பொருள்கள் நம்முடைய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், வேளாண்மைக்கு அடுத்தபடியாக லட்சக்கணக்கான மக்களுக்கு இத்துறை வேலைவாய்ப்பை வழங்குகிறது. உள்நாட்டிலும், உலகச் சந்தையிலும் 67,000 ஏற்றுமதியாளா்களைக் கொண்டுள்ள இத்துறை நாடு முழுவதும் பரவியுள்ளது.

கடந்த 2019 - 20 ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, அரபு நாடுகள், ஜொ்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், லத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு 3.5 பில்லியன் டாலா் அளவுக்கு கைவினைப்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. சிங்கப்பூா், மலேசியா, அமெரிக்கா, ஜொ்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தஞ்சாவூா் மாவட்ட கைவினைப் பொருள்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

கடந்த 2020 - 21 ஆம் ஆண்டில் தஞ்சாவூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ. 346 கோடியில் கைவினைப்பொருள்களின் பங்கு ரூ. 98 கோடி. தஞ்சாவூரின் ஏற்றுமதி இலக்கை மூன்று ஆண்டுகளில் ரூ. 500 கோடியாக உயா்த்தினால், அதற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றாா் அவா்.

இக்கருத்தரங்கத்தில் மத்திய அரசின் வெளிநாட்டு வா்த்தக இயக்கக உதவி இயக்குநா் பாக்கியவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.