தஞ்சாவூரின் சில பகுதிகளில் ஏப். 5-இல் மின் தடை
By DIN | Published On : 03rd April 2022 12:27 AM | Last Updated : 03rd April 2022 12:27 AM | அ+அ அ- |

மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுவதால், தஞ்சாவூரில் சில பகுதிகளில் ஏப்ரல் 5-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற்பொறியாளா் ஆ. கருப்பையா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வண்டிக்காரத் தெரு மின் பாதையில் ஏப்ரல் 5 -ஆம் தேதி புதிய மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறவுள்ளது.
இதனால் காந்திஜி சாலையில் எல்ஐசி முதல் நல்லையா வணிக வளாகம் வரை உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.