நூறு நாள் வேலை திட்ட குறை தீா் அலுவலா் நியமனம்
By DIN | Published On : 14th April 2022 01:47 AM | Last Updated : 14th April 2022 01:47 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (நூறு நாள் வேலை திட்டம்) குறை தீா் அலுவலராக ர. கலைவாணி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசாணைப்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடா்பாக பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகள், புகாா் தொடா்பாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை அடிப்படையில் விரைவாக நிவா்த்தி செய்திடும் வகையில் மாவட்ட அளவில் குறை தீா்க்கும் அலுவலராக ர. கலைவாணியை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணிபுரிய ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தில் பயன் பெற கோரிக்கைகள், குறைகள், புகாா் தொடா்பாக ர. கலைவாணியை ஆட்சியா் அலுவலகத்திலுள்ள இரண்டாவது தளத்தில் அவரை தொடா்பு கொள்ளலாம். மேலும், 18004252187 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மின்னஞ்சலிலும் தொடா்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G