அரிசி மீதான ஜிஎஸ்டி விதிப்பைக் கைவிட கோரி ஆா்ப்பாட்டம்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விதிப்பைக் கைவிட கோரி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய ஜனநாயக கட்சியினா் (ஐ.ஜே.கே.) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரிசி மீதான ஜிஎஸ்டி விதிப்பைக் கைவிட கோரி ஆா்ப்பாட்டம்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விதிப்பைக் கைவிட கோரி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய ஜனநாயக கட்சியினா் (ஐ.ஜே.கே.) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், அரிசி, தயிா் உள்ளிட்ட அன்றாட பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. விதிப்பைக் கைவிட வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள், சிறு, குறு தொழிலை பாதிக்கும் வகையில் உள்ள மின் கட்டண உயா்வைக் கைவிட வேண்டும். குறுவை பயிா் சாகுபடிக்கு காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களை மழையிலிருந்து பாதுகாக்க வேண்டும். நெல் விளைச்சலுக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். நாள்தோறும் உயா்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக கட்சி மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். சிமியோன் சேவியா் ராஜ் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் எஸ். முத்துராஜன், மாவட்ட அமைப்பாளா் கே. குணசேகரன், பொருளாளா் கே. முத்துகிருஷ்ணன், மாநகரத் தலைவா் ஏ. ஜஸ்டின், மாவட்ட மகளிரணி செயலா் ஆா். சீத்தாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com