மருந்து விற்பனை பிரதிநிதிகள் மாநாடு நாளை தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 12:04 AM | Last Updated : 05th August 2022 12:04 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் ஜெயராம் மஹாலில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க 30 ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை (ஆக.6) தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவா் பா. சத்தியநாராயணன் தெரிவித்தது:
மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு தமிழகத்தில் 8 மணி நேர வேலை உத்தரவாதத்துக்கான அரசாணையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு அறிவித்துள்ள மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் மீதான நீதிமன்றத் தடையை உடனடியாக நீக்க விரைவான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மேலும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 21,000 ஆக உயா்த்த வேண்டும்.
மக்கள் உயிா் காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டியை முற்றிலுமாக நீக்க வேண்டும். எண்ம மயமாக்கல் என்ற பெயரில் நிறுவனங்கள் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளின் தனியுரிமையில் தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுகிறது என்றாா் சத்தியநாராயணன்.
அப்போது, மாநிலப் பொதுச் செயலா் பிரபாகா் தேவதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.