கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட  தேசியக் கொடி

கும்பகோணத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
கும்பகோணம் மாநகராட்சியில் தலைகீழாக ஏற்றப்பட்ட  தேசியக் கொடி

கும்பகோணம்: கும்பகோணத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கும்பகோணம்: நாட்டின் 75-வது சுதந்திர நாளை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் முதல் மேயர் கே.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் ஆணையர் செந்தில் முருகன் முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றினார்.  

அப்போது தேசியக் கொடி  மேலே ஏற்றப்பட்ட பிறகு தான் கொடி தலைகீழாக இருப்பதை அறிந்தனர். உடனடியாக அருகில் இருந்த துணை மேயர் தமிழழகன் கொடியை விரைவாக கீழே இறக்கி அவசர அவசரமாக சரியான முறையில் கொடி ஏற்றப்பட்டது. 

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.  சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com