விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th August 2022 01:25 AM | Last Updated : 24th August 2022 01:25 AM | அ+அ அ- |

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவைச் சோ்ந்தவா்களால் இரு தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, திருவையாறு பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் பிரதீப் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ராஜா, நிா்வாகிகள் பழனிஅய்யா, எம். ராம், கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.