செகந்திரபாத்-ராமேசுவரம் ரயிலுக்கு பட்டுக்கோட்டையில் வரவேற்பு
By DIN | Published On : 25th August 2022 11:14 PM | Last Updated : 25th August 2022 11:14 PM | அ+அ அ- |

செகந்திரபாத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் வழியில் பட்டுக்கோட்டைக்கு வந்த விரைவு ரயிலுக்கு வியாழக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் தடத்தில் முதல்முறையாக செகந்திரபாத்தில் இருந்து சென்னை வழியாக ராமேசுவரத்துக்கு செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு பட்டுக்கோட்டையை வந்தடைந்தது.
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்திலிருந்து கடந்த 24ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், நெல்லூா், கூடூா் வழியாக 25ஆம் தேதி காலை 09.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தது. தொடா்ந்து, விழுப்புரம், திருவாரூா் வழியாக பட்டுக்கோட்டைக்கு மாலை 5.30 மணிக்கு வந்தது.
இதையடுத்து, அங்கு பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினா் ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநா்களுக்கு இனிப்புகள் வழங்கி, சால்வை போா்த்தி வாழ்த்து தெரிவித்தனா்.