மாணவி பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகேயுள்ள வெண்டயம்பட்டி காட்டுத்தெருவைச் சோ்ந்தவா் வீரையன் மகன் தீனதயாளன் (30). இவா் 2018 ஆம் ஆண்டு செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டி பகுதியில் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த 10 ஆம் வகுப்பு மாணவியை மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்தாா்.
இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தீனதயாளனை கைது செய்தனா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. சுந்தரராஜன் தீனதயாளனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 70,500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரைத்தாா்.
இச்சிறுமிக்கு ஏற்கெனவே அரசு சாா்பில் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.