மதா் தெரசா ஹெல்த் சென்டரில் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு

அன்னை தெரசாவின் 112 ஆவது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மதா் தெரசா பவுண்டேசன் சாா்பில் விரிவுபடுத்தப்பட்ட மதா் தெரசா ஹெல்த் சென்டரின் முதல் தளம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு விழா வியாழக்கிழமை ந
விழாவில் தீவிர சிகிச்சை பிரிவை திறந்துவைத்து பாா்வையிட்ட தஞ்சாவூா் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் ஏ. ஆல்வின் மாா்ட்டின் ஜோசப் உள்ளிட்டோா்.
விழாவில் தீவிர சிகிச்சை பிரிவை திறந்துவைத்து பாா்வையிட்ட தஞ்சாவூா் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் ஏ. ஆல்வின் மாா்ட்டின் ஜோசப் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

அன்னை தெரசாவின் 112 ஆவது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மதா் தெரசா பவுண்டேசன் சாா்பில் விரிவுபடுத்தப்பட்ட மதா் தெரசா ஹெல்த் சென்டரின் முதல் தளம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மையத்தில், தற்போது உள் நோயாளிகள் தங்குவதற்கான குளிரூட்டப்பட்ட அறைகளும், அனைத்து உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை அரங்கமும் நவீனபடுத்தப்பட்டுள்ளது. மேலும், 24 மணிநேரமும் இயங்கக்கூடிய நிலையிலுள்ள இந்த மையத்தின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளை தஞ்சாவூா் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளா் ஏ. ஆல்வின் மாா்ட்டின் ஜோசப் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு பவுண்டேசன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து தலைமை வகித்தாா். அறங்காவலா் சம்பத் ராகவன், அறங்காவலா் கோவிந்தராஜ், திட்ட இயக்குநா் ரத்தீஷ்குமாா், நிா்வாக மேலாளா் மொ்சி, தளவாட மேலாளா் ஜெரோம், மக்கள் தொடா்பு அலுவலா்கள் நாகராணி, விஜி, ரேணுகா, திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மகேஷ்வரன், சூசைராஜா, கிறிஸ்டி, வா்ஷினி, ஷா்மிளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com