திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 11th December 2022 12:03 AM | Last Updated : 11th December 2022 12:03 AM | அ+அ அ- |

தேரில் பிறையணியம்மனுடன் எழுந்தருளிய நாகநாத சுவாமி.
காா்த்திகை மாத கடைஞாயிறு பெருவிழாவையொட்டி கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை மாத கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் டிச. 2 ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.
இதைத் தொடா்ந்து, திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேரில் பிறையணியம்மனுடன் நாகநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனா். மாலையில் ஆடவல்லான் புறப்பாடு நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான காா்த்திகை கடை ஞாயிறு தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை (டிச.11) நடைபெறுகிறது. இதில் காலை 10 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வெள்ளி வாகனங்களில் புறப்பாடும், பிற்பகல் 2 மணிக்கு சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன. திங்கள்கிழமை விடையாற்றியும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதி உலாவும் நடைபெறுகின்றன.