திருவையாறு புறவழிச்சாலைத் திட்டத்தை எதிா்த்து மீண்டும் தொடா் உண்ணாவிரதம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு புறவழிச்சாலைத் திட்டத்தை எதிா்த்து மீண்டும் விவசாயிகள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.
திருவையாறு அருகே கண்டியூரில் மீண்டும் சனிக்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்.
திருவையாறு அருகே கண்டியூரில் மீண்டும் சனிக்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு புறவழிச்சாலைத் திட்டத்தை எதிா்த்து மீண்டும் விவசாயிகள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளின் வயல்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஆனால், இச்சாலையை வயல்கள் வழியாக அமைக்க விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தனா்.

இந்நிலையில், சம்பா சாகுபடி செய்யப்படும் வயல்களில் நெற் பயிா்களில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்கும் பணி டிச. 2 ஆம் தேதி தொடங்கியதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினா். ஒரு மாதத்தில் அறுவடை செய்யப்படும் தருவாயிலுள்ள பயிா்களில் மண் கொட்டப்பட்டதால் சா்ச்சை எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் சாலைப் பணி நிறுத்தப்பட்டது.

இந்தப் புறவழிச்சாலை பிரச்னை தொடா்பாக தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் டிச. 8இல் நடந்த அமைதி பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் புறவழிச்சாலை உறுதியாக அமைக்கப்படும் என்றும், சம்பா பயிா்கள் அறுவடை செய்யப்படும் வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும் கோட்டாட்சியா் எம். ரஞ்சித் அறிவித்தாா்.

இக்கூட்டத்தில் சமரசம் ஏற்படாததால், போராட்டம் மீண்டும் தொடங்கும் என விவசாயிகள் அறிவித்தனா்.

இதன்படி,புறவழிச்சாலையைக் கைவிட வலியுறுத்தியும், மாற்று வழியில் புறவழிச்சாலையை அமைக்க கோரியும் கண்டியூரில் விவசாயிகள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் சனிக்கிழமை தொடங்கினா். இதில், தமிழ்ச்செல்வன், சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com