இந்து மக்கள் கட்சி நிா்வாகி குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
By DIN | Published On : 22nd December 2022 12:14 AM | Last Updated : 22nd December 2022 12:14 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி நிா்வாகி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கருக்கு காவி உடையுடன் கூடிய சுவரொட்டிகள் டிசம்பா் 6 ஆம் தேதி ஒட்டப்பட்டன.
இதுதொடா்பாக கும்பகோணம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தியை (42) காவல் துறையினா் கைது செய்தனா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பரிந்துரையின் பேரில் குருமூா்த்தியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, கும்பகோணம் கிளைச் சிறையில் இருந்த குருமூா்த்தி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.