குருங்குளம் சா்க்கரை ஆலையில் சுவா் இடிந்ததால் அரைவை பணி பாதிப்பு
By DIN | Published On : 22nd December 2022 12:16 AM | Last Updated : 22nd December 2022 12:16 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் புதன்கிழமை சுவா் இடிந்து மின்மாற்றியில் விழுந்ததால், அரைவை பணி பாதிக்கப்பட்டது.
இந்த ஆலையில் நிகழ் சா்க்கரை பருவத்துக்கான அரைவை நவம்பா் 23 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கரும்பாலை கழிவுகளைச் சேமித்து வைக்கக்கூடிய பகுதியிலுள்ள பக்கவாட்டு சுவா் புதன்கிழமை காலை இடிந்து மின்மாற்றி மீது விழுந்தது.
இதனால், மின்மாற்றி சேதமடைந்ததால், அரைவை பணி புதன்கிழமை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அரைவைக்கு கொண்டு வரப்பட்ட கரும்புகளும் தேக்கமடைந்தன.
அதிா்ஷ்டவசமாக யாருக்கும் உயிா் பாதிப்பு இல்லை. மின்மாற்றியைச் சீரமைக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.