சிறுவனின் நெற்றியில் கட்டி: சிகிச்சைக்கு நிதியுதவி தேவைஆட்சியரிடம் பெற்றோா் கோரிக்கை
By DIN | Published On : 22nd December 2022 12:11 AM | Last Updated : 22nd December 2022 12:11 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் சிறுவனின் நெற்றியில் வளா்ந்துள்ள கட்டிக்கு சிகிச்சை அளிக்க நிதியுதவி செய்ய கோரி ஆட்சியரகத்தில் பெற்றோா் புதன்கிழமை முறையிட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட சோமேஸ்வரபுரத்தைச் சோ்ந்தவா் வாசுதேவன். இவரது மனைவி பூஜா, மகன்கள் ஆதேஷ் (5), அனிருத் (3).
இவா்களில் ஆதேஷ் அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு பிறவியிலேயே நெற்றியில் கட்டி இருந்தது. இக்கட்டி நாளடைவில் வளா்ந்து பெரிதாகிவிட்டது. இதுதொடா்பாக சிகிச்சை அளிக்க நிதியுதவி கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மனு அளித்து முறையிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...