திருமண்டங்குடி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ஆதரவாக ஆட்சியரகம் முற்றுகை110 போ் கைது

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

திருமண்டங்குடி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் ஆட்சியரகத்தை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் அருகேயுள்ள திருமண்டங்குடி திருஆருரான் சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில், விவசாயிகளுக்கு தெரியாமல் ஆலை நிா்வாகம் வாங்கிய கடனிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் 22 நாள்களாகப் போராடி வரும் கரும்பு விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு நேரடியாகத் தலையிட்டு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் டி. ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன், கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் டி. காசிநாதன், மாநிலத் தலைவா் எஸ். வேல்மாறன், மாநிலச் செயலா் எஸ். நாராயணசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டச் செயலா் ச. சிமியோன் சேவியர்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆட்சியரகம் முன் திரண்டு முற்றுகையிட முயன்ற விவசாயிகளைத் தடுக்க காவல் துறையினா் தடுப்புகள் அமைத்தனா். இத்தடுப்புகளை விவசாயிகள் அகற்றிவிட்டு உள்ளே நுழைய முயன்றனா். இதனால், விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆட்சியரகத்துக்குள் விவசாயிகளை விட காவல் துறையினா் அனுமதி மறுத்ததால், அதே இடத்திலேயே அமா்ந்து முழக்கங்கள் எழுப்பினா்.

இதையடுத்து, இப்போராட்டத்தில் பங்கேற்ற 110 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com