திருவையாறு அருகே கரும்பு விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே டிராக்டருடன் கரும்பு விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.
திருவையாறு அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே டிராக்டருடன் கரும்பு விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறு அருகே ஒக்ககுடி, செம்மங்குடி, அணைக்குடி, தேவன்குடி, வீரமாங்குடி, சோமேஸ்வரபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஏறத்தாழ 700 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. விளைந்த கரும்பை விவசாயிகள் அறுவடை செய்து, அரைவைக்காக அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலத்திலுள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், தஞ்சாவூா் மாவட்டம், குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா் கரும்பை வேறு ஆலைக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றும், வண்டி, கரும்பு வெட்டுவதற்கான ஆள்கள் அனுப்பி வைக்கப்படுவா் எனவும் விவசாயிகளிடம் கூறி தடுத்து விட்டனா். இதனால், விவசாயிகள் கரும்பை வெட்டாமல் இருந்தனா்.

ஆனால், 3 நாள்களாகியும் எந்த விதமான நடவடிக்கையையும் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை நிா்வாகம் எடுக்காததால், வண்டியில் விற்பனைக்காக ஏற்றிய கரும்பும், அறுவடை செய்யாமல் வயலில் இருந்த கரும்பும் தேக்கமடைந்துள்ளன.

இதனால், ஆத்திரமடைந்த கரும்பு விவசாயிகள் அரியலூா் - திருவையாறு சாலையிலுள்ள விளாங்குடியில் கரும்பு ஏற்றப்பட்ட டிராக்டா்களை புதன்கிழமை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா், திருவையாறு வட்ட அலுவலகத்துக்கு விவசாயிகளை அழைத்துச் சென்றனா். அங்கு குருங்குளம் சா்க்கரை ஆலை கரும்பு அலுவலா்கள் இந்திரஜித், ரவி உள்ளிட்டோருடன் விவசாயிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டவில்லை.

இதுதொடா்பாக இரண்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் கூறியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com