மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
By DIN | Published On : 22nd December 2022 12:15 AM | Last Updated : 22nd December 2022 12:15 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 6,062 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,219 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 104 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 2,008 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,500 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 411கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.