தேசிய உறைவாள் போட்டி:கும்பகோணத்திலிருந்து தமிழக அணி பயணம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தைச் சோ்ந்த 90 வீரா்கள், வீராங்கனைகள் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு புதன்கிழமை புறப்பட்ட தமிழக உறைவாள் சண்டை வீரா்கள், வீராங்கனைகள்.

ஜம்மு காஷ்மீரில் 23-ஆவது தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டி டிசம்பா் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 90 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதையடுத்து உறைவாள் சண்டை தமிழக சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலரும், தேசிய சங்கத்தின் தலைவருமான ஜெ. செந்தில்குமாா் தலைமையில் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை புறப்பட்டனா்.

இவா்களை தமிழக உறைவாள் சண்டை சங்கத் தலைவரும், கும்பகோணம் நாராயண நிதி நிறுவனத்தின் நிறுவனருமான எஸ். காா்த்திகேயன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com