தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
By DIN | Published On : 30th December 2022 12:00 AM | Last Updated : 30th December 2022 12:00 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பட்டுக்கோட்டையில் தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தமிழக அரசின் அரசாணை எண் 152-ஏ ( ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்கும் முறை) ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆயிரம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியில் ஒப்பந்த முறையை அமல்படுத்த போவதாக அரசு தரப்பில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை அரசு அமல்படுத்த கூடாது என்றும்,
சுயஉதவிக் குழு துப்புரவு பணியாளா்களையே தொடா்ந்து பணியில் நீடிக்க அரசாணை பிறப்பிக்க கோரியும், இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில்
சுமாா் 1000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டமும், கோரிக்கை ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளா் ஊஞ்சை அரசன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகா்மன்ற உறுப்பினா் சதா சிவக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகளும், தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.