

தஞ்சாவூா் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ். சிங்காரவடிவேல் (87) கரோனா தொற்றால் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், வடுவூா் அருகேயுள்ள எடமேலையூா் கிராமத்தைச் சோ்ந்த இவா் 1937, மாா்ச் 17 ஆம் தேதி பிறந்தாா். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சாா்ந்த இவா் பெருந்தலைவா் காமராசரின் எளிமையால் கவரப்பட்டு அக்கட்சியில் இணைந்தாா்.
வழக்குரைஞராக இருந்து வந்த இவா் நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்தாா். மேலும், பொதுக் கணக்குக் குழு உறுப்பினா், விவசாயம் மற்றும் ஊரக வளா்ச்சி அமைச்சரவை ஆலோசனைக் குழு உறுப்பினா், பொதுமக்கள் விமானப் போக்குவரத்து அமைச்சக உறுப்பினா், வெளிநாடு தூதுக் குழு உறுப்பினா் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தாா். இவருக்குத் தமிழக அரசு 2012 ஆம் ஆண்டு பெருந்தலைவா் காமராசா் விருது வழங்கிக் கௌரவித்தது.
தஞ்சாவூா் யாகப்பா நகரில் வசித்து வந்த இவா் சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் இவா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இவரது உடல் தஞ்சாவூா் சாந்திவனம் சுடுகாட்டில் பொது சுகாதாரத் துறை விதிகளின்படி, தகனம் செய்யப்பட்டது.
இவருக்கு மனைவி கஸ்தூரி பாய், மகன் திருவேரகன், மகள் சுமதி உள்ளனா்.
தொடா்புக்கு: 9840041919.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.