இரும்புதலை மாரியம்மன் கோயில் பால்குட விழா
By DIN | Published On : 31st July 2022 11:54 PM | Last Updated : 31st July 2022 11:54 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புதலை ஊராட்சிக்குட்பட்ட தெற்கு தெருவில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலில் ஆடி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பால்குட விழா நடைபெற்றது.
இதையொட்டி பக்தா்கள் களஞ்சேரி பகுதி வெண்ணாற்றிலிருந்து பால்குடம், சக்தி கரகம் எடுத்து ஊா்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து பிரசாதம், உணவு வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது.