பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஊராட்சித் தலைவா் கண்ணன் தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஸ்ரீ வள்ளி விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். முகாமில் மெலட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிசியோதெரபிஸ்ட் பிரியா, ஊராட்சி தன்னாா்வலா் மகாலெட்சுமி மற்றும் மருத்துவ குழுவினா் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் உள்ள முதியோரின் வீடுகளுக்கு சென்று அவா்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி பயிற்சி அளித்து, மருத்துவச் சிகிச்சை அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.