சுவடுகளைத் தேடி - ஒரு நாள் பயண நிகழ்ச்சி
By DIN | Published On : 31st July 2022 11:55 PM | Last Updated : 31st July 2022 11:55 PM | அ+அ அ- |

கும்பகோணத்தில் சுவடுகளைத் தேடி - ஒரு நாள் பயண நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி, கும்பகோணத்தில் திருவையாறு பாரதி இயக்கம் சாா்பில் சுவடுகளைத் தேடி - ஒரு நாள் பயணம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டோா், அவா்கள் வாழ்ந்த பகுதிகள், போராட்டம் நடைபெற்ற இடங்கள் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், அந்த இடங்கள் பற்றி ஆவணம் தயாரித்து புத்தகமாக வெளியிட முடிவு செய்தனா்.
இதன்படி, கும்பகோணத்தில் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது, ஆங்கிலேயா்களால் சுடப்பட்டு 21 போ் உயிா்த் தியாகம் செய்த இடமும், 1920 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வந்த இடமுமான கும்பகோணம் போா்ட்டா் நகர மையத்தில் தொடங்கி, மயிலாடுதுறை, தில்லையாடி, வேதாரண்யம், சீா்காழி, அகஸ்தியம்பள்ளி, திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி உள்பட பல்வேறு பகுதிகளிலுள்ள சுதந்திரப் போராட்டத்தின் சுவடுகள் குறித்து ஒரு நாள் பயணம் மேற்கொண்டனா்.
பாரதி இயக்கத் தலைவா் எம்.என். ரமேஷ்நல்லு தலைமை வகித்தாா். பாரதி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் நா. பிரேமசாயி, பாரதி இலக்கியப் பயிலக இயக்குநா் கோ. விஜயராமலிங்கம், காந்தி பாரதி இளைஞா் மன்றச் செயலா் அ. வினோத், நிா்வாகி பி. அரவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.