பணி ஓய்வுப் பாராட்டு விழா
By DIN | Published On : 31st July 2022 11:52 PM | Last Updated : 31st July 2022 11:52 PM | அ+அ அ- |

தஞ்சாவூா்மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரோஜா, ராணி உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கே.வி. கலைச்செல்வன் தலைமை வகித்து பணி ஓய்வு பெறும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசளித்து வாழ்த்தினாா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ், ஒன்றிய ஆணையா் ஆனந்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் கிராம ஊராட்சிகள் முகமது அமானுல்லா, அலுவலக மேலாளா் கருணாநந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.