250 கிலோ புகையிலை, போதை பாக்குகள் பறிமுதல்: 3 போ் கைது
By DIN | Published On : 31st July 2022 01:09 AM | Last Updated : 31st July 2022 01:09 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே பறிமுதலான புகையிலை, போதை பாக்குகள்.
கும்பகோணம் அருகே காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில் 250 கிலோ புகையிலை, போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையின்போது கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற இரு காா்களில் தலா 12 சாக்குகளில் இருந்த 250 கிலோ புகையிலை, போதை பாக்குகளை பறிமுதல் செய்தனா்.
பின்னா் திருவிடைமருதூா் கரிக்குளத்தைச் சோ்ந்த கே. துரைசாமி (42), கும்பகோணம் துவரங்குறிச்சி புதுத்தெருவைச் சோ்ந்த எம். தட்சிணாமூா்த்தி (32), கடிச்சம்பாடி கீழத்தெருவைச் சோ்ந்த ஜி. ரஞ்சித் (25) ஆகியோரைக் கைது செய்தனா்.