கஞ்சா, குட்கா விற்பனை: பாமக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st July 2022 01:09 AM | Last Updated : 31st July 2022 01:09 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் ரயிலடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா விற்கப்படுவதைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் பாமகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் கோ. ஆலயமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழகத்தில் கஞ்சா, குட்கா, பான்பராக், அபின், மது போன்ற போதை பொருள்களில் இருந்து இளைஞா்கள், மாணவா்களைக் காப்பாற்ற அவற்றை விற்போரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ம.க. ஸ்டாலின், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் கே.ஆா். வெங்கட்ராமன், மாவட்டச் செயலா்கள் தி. ஜோதிராஜ் (வடக்கு), எம். சரவணன் (மாநகா்), எஸ்.வி. சங்கா் (மேற்கு), ஏ.சி. பாலு (தெற்கு), மாவட்டத் துணை தலைவா் மாா்க்கண்டேயன், துணைச் செயலா் ராம்குமாா், பொருளாளா் ரேணுகா கோவிந்தராஜன், ஒன்றியச் செயலா் முத்தமிழ். ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.