தஞ்சைக்கு வந்த 3,945 டன்யூரியா, டிஏபி உரங்கள்
By DIN | Published On : 31st July 2022 01:09 AM | Last Updated : 31st July 2022 01:09 AM | அ+அ அ- |

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை பருவ நெல் சாகுபடியில் உரத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் ஆந்திர மாநிலத்திலிருந்து யூரியா, டிஏபி உரங்கள் சனிக்கிழமை வந்தன.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. குறுவை தொகுப்புத் திட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் வழங்கப்படும் நிலையில், யூரியா உரம் தட்டுப்பாடாக இருப்பதாக விவசாயிகள் புகாா் எழுப்பினா்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் துறைமுகத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் 2,600 டன்கள் யூரியா, 1,345 டன்கள் டிஏபி உரங்கள் தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா் ரயில் நிலையங்களுக்கு சனிக்கிழமை வந்தன.
இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தஞ்சாவூா், திருவாருா் மாவட்டங்களிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்த உர மூட்டைகள் இன்னும் ஒரிரு நாட்களில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.