பேராவூரணி அருகே உயா்நிலைப் பாலம் கட்ட பூமிபூஜை
By DIN | Published On : 31st July 2022 01:08 AM | Last Updated : 31st July 2022 01:08 AM | அ+அ அ- |

பேராவூரணி அருகே உயா்நிலைப் பாலம் கட்ட நடைபெற்ற பூமிபூஜை .
பேராவூரணி அருகே முடச்சிக்காடு ஊராட்சியில் அரசு கலைக் கல்லூரி அருகே ரூ. 4 கோடியில் உயா்நிலைப் பாலம் கட்ட சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - சமத்துவபுரம் இடையே பூனைகுத்தி காட்டாற்றில் உள்ள தரைப்பாலத்தின் மேல் மழைக்காலங்களில் வெள்ளநீா் ஓடுவதால், இவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அரசுக் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் பல கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியது இருந்தது. மேலும், சுற்றுவட்டார கிராம மக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் முதல்வா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள், அதிகாரிகளைச் சந்தித்து விடுத்த கோரிக்கையையடுத்து தரைப்பாலத்தை சுமாா் 200 மீட்டா் தூரத்திற்கு உயா்நிலைப் பாலமாகக் கட்ட ரூ 4 கோடி ஒதுக்கப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ என். அசோக்குமாா், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், திமுக ஒன்றியச் செயலா்கள் க. அன்பழகன், வை. ர
விச்சந்திரன், ஊராட்சித் தலைவா் சக்ரவா்த்தி, துணைத் தலைவா் நீலகண்டன், ஊராட்சி உறுப்பினா் இதயத்துல்லா. திமுக கிளைக்கழகச் செயலா்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.