மதுக்கூா் அருகே தப்பிய கைதி விழுப்புரத்தில் கைது
By DIN | Published On : 31st July 2022 01:09 AM | Last Updated : 31st July 2022 01:09 AM | அ+அ அ- |

மதுக்கூா் அருகே தப்பிய பரோல் கைது விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டாா்.
பட்டுக்கோட்டை அருகிலுள்ள மதுக்கூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிராங்குடியைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் சத்யராஜ் (33). கரூா் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதியாக இருந்தாா்.
இந்நிலையில் கடந்த 7.7.22 அன்று 2 நாள்கள் போலீஸ் காவலுடன் கூடிய பரோலில் மதுக்கூரிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தவா் அதிகாலை தப்பிச் சென்றாா்.
இதையடுத்து அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை உதவி காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, விழுப்புரம் அருகே பதுங்கியிருந்த சத்யராஜை சனிக்கிழமை கைது செய்தனா்.