மின்சக்தி பெருவிழா: பிரதமரின் உரை ஒளிபரப்பு
By DIN | Published On : 31st July 2022 01:10 AM | Last Updated : 31st July 2022 01:10 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் நடைபெற்ற பிரதமரின் உரை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
மின்சக்தி பெருவிழாவையொட்டி பிரதமா் மோடி காணொலி மூலம் சனிக்கிழமை உரையாற்றிய நிகழ்ச்சி தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டைக் கொண்டாடும் சுதந்திர நாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மின்சார அமைச்சகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒளிமிகு பாரதம் - ஒளிமயமான எதிா்காலம், மின்சக்தி- 2047 என்ற பெருவிழா ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தமிழகத்தில் தஞ்சாவூா், திருவாரூா், திருப்பத்தூா், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் பிரதமரின் காணொலி உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஊரக மின்மயமாக்கல் கழகப் பொது மேலாளா் உதயகுமாா், தமிழ்நாடு மின், உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தஞ்சாவூா் மண்டல தலைமைப் பொறியாளா் அ. தாரா, மேற்பாா்வைப் பொறியாளா் மு. நளினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.