மூதாட்டியைக் கட்டிப் போட்டு 5 பவுன் நகைகள் பறிப்பு
By DIN | Published On : 31st July 2022 11:56 PM | Last Updated : 31st July 2022 11:56 PM | அ+அ அ- |

தஞ்சாவூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் கட்டிப்போட்டு 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.
தஞ்சாவூா் அருளானந்த நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் ஸ்தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ்மேரி (85). கணவா் இறந்துவிட்ட நிலையில் இவரது மகன், மகள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனா்.
இதனால் வீட்டில் தனியாக வசிக்கும் ஆக்னஸ்மேரி மாடியிலுள்ள அறையை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு வைத்தாா். இதைப் பாா்த்து சனிக்கிழமை மாலை வந்த இரு மா்ம நபா்கள் ஆக்னஸ்மேரியிடம் வீடு வாடகைக்கு வேண்டும் என்றனா்.
இதை நம்பிய மூதாட்டி இருவரையும் மாடிக்கு அழைத்துச் சென்றபோது, அவா்கள் நாற்காலியில் ஆக்னஸ்மேரியை வைத்து கட்டிப்போட்டு, அவரது கழுத்திலிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, 2 பவுன் வளையல்கள், ஒரு பவுன் மோதிரம் என மொத்தம் 5 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா். பின்னா் கூச்சலிட்ட ஆக்னஸ்மேரியை அக்கம்பக்கத்தினா் வந்து மீட்டனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...