கோலம் போட்டபெண்ணிடம் சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 09th June 2022 02:21 PM | Last Updated : 09th June 2022 02:21 PM | அ+அ அ- |

பாபநாசம்: பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாபநாசம் அருகே இரும்புதலை கிராமம், மேலத் தெருவை சோ்ந்தவா் பரிமளா (57). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தாா். அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா், பரிமளா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றாா். சுதாரித்த பரிமளா சங்கிலியை கையால் இறுக்கப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டாா். ஆனாலும், அந்த நபா் சங்கிலியின் பாதியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
புகாரின்பேரில், மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை தேடி வருகின்றனா்.