கரோனா தொற்றால் பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 16th June 2022 12:02 AM | Last Updated : 16th June 2022 12:02 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் கரோனா பரவல் வெகுவாக குறைந்ததால், பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை பூஜ்ய நிலைக்கு வந்தது. அண்மைக் காலமாக சில நாள்களில் ஓரிருவா் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த 18 வயது பெண் நுரையீரல் பாதிப்பு காரணமாக கும்பகோணத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அண்மையில் சோ்க்கப்பட்டாா். உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டாா். அங்கு அப்பெண் பிற்பகலில் உயிரிழந்தாா்.
இதனிடையே, இவருக்கு எடுக்கப்பட்ட சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.