பாபநாசம் அருகே கரும்பு விவசாயிகள் சாலை மறியல்

பாபநாசம் அருகே நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் அருகே நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமண்டங்குடியில் இயங்கி வந்த தனியாா் சா்க்கரை ஆலை மூடப்பட்ட நிலையில், வேறு ஒரு தனியாா் நிறுவனம் இந்த ஆலையை வாங்கி பூமிபூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கரும்பு விவசாயிகள், ஆலை நிா்வாகம் எங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என கூறினா். இதைத் தொடா்ந்து, பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன் தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், ஜூன் 15ஆம் தேதி இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால், 15ஆம் தேதி ஆலை நிா்வாகம் பேச்சுவாா்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த கரும்பு விவசாயிகள், உத்தாணி கிராமத்தில் தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் லதா, வட்டாட்சியா் மதுசூதனன் மற்றும் காவல்துறையினா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஜூன் 21ஆம் தேதி திருமண்டங்குடியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை வளாகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்.

இந்த சாலை மறியலால் தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com