அய்யம்பேட்டையில் புதிய பாலம் கட்டுமானப் பணி ஆய்வு

பாபநாசம் வட்டம் , அய்யம்பேட்டையில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமானப் பணிகளை பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பாபநாசம் வட்டம் , அய்யம்பேட்டையில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமானப் பணிகளை பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அய்யம்பேட்டையில், அய்யம்பேட்டை- கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்பட்டு வந்த குடமுருட்டி ஆற்றின் குறுக்கே இருந்த பழைய பாலம் பழுதடைந்த நிலையில், பழைய பாலத்தின் வடகரை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதை சீரமைக்கும் பணிகளும், பழைய பாலத்திற்கு மாற்றாக ரூ. 9.30 கோடியில்

கட்டப்பட்டு வரும் புதிய பாலம் கட்டுமான பணிகளையும் பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பாபநாசம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டபொறியாளா் பானு தாசன், மாவட்ட குழு உறுப்பினா் கோ. தாமரைசெல்வன், தெற்கு ஒன்றிய செயலாளா் என். நாசா், ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com