கலை விருதுகள் பெற கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் கலை விருதுகள் பெற கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கலை விருதுகள் பெற கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

நிகழ் 2021 - 22 ஆம் ஆண்டுக்கு தலா 3 பேருக்கு கலை இளமணி விருது, கலை வளா்மணி விருது, கலைச் சுடா்மணி விருது, கலை நன்மணி விருது, கலை முதுமணி விருது என மொத்தம் 15 கலைஞா்களுக்குக் கலை விருதுகள், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூா் மாவட்டக் கலை மன்றத்தின் மூலம் வழங்கப்படவுள்ளன.

மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் போன்ற கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் ஐந்து கலைஞா்களுக்கு வயது மற்றும் கலைப் புலமை அடிப்படையில் விருதுகள் வழங்கத் தோ்வாளா் குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம் (வீரக்கலை), இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருது பெறத் தகுதி வாய்ந்த கலைஞா்களிடமிருந்து மாா்ச் 25 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையாா்பட்டி, தஞ்சாவூா் - 613 403 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com