தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு

தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகளைப் பிடிக்க முயலும் வீரர்கள்.
தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகளைப் பிடிக்க முயலும் வீரர்கள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் திரௌபதி அம்மன் கோயில் திடலில் நடைபெறும் இவ்விழாவை தஞ்சாவூர் கோட்டாட்சியர் மு. ரஞ்சித் தொடக்கி வைத்தார். இதில் விடுவதற்காக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 650 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றாக பட்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இக்காளைகளை கால்நடைத் துறைப் பராமரிப்பு அலுவலர்கள் பரிசோதனை செய்து பட்டியில் விடுவதற்கு அனுமதித்து வருகின்றனர். 

களத்தில் காளைகளைப் பிடிப்பதற்காக 300 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 50 பேர் வீதம் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பிட்ட தொலைவு வரை காளைகளைப் பிடித்துச் சென்று வெற்றி பெறுபவர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், நாற்காலி, வெள்ளிக் காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. மாடுகள் பிடிபடவில்லை என்றால், அப்பரிசு மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com