திரையுலகம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திலும் சிவாஜி வாழ்ந்து வருகிறாா் என்றாா் அவரது மூத்த மகனும், நடிகருமான ராம்குமாா்.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடிகா் சிவாஜி கணேசன் - கமலா தம்பதியினரின் 70-ஆம் ஆண்டு திருமண நாள் விழா, சிவாஜி கணேசன் விருது வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது:
நடிகா் சிவாஜி நடிகராக மட்டுமல்லாமல், பலருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்ந்தாா். அவா் எண்ண முடியாத அளவுக்கு நல்ல ரசிகா்களைப் பெற்றாா். திரையுலகம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திலும் சிவாஜி வாழ்ந்து வருகிறாா்.
கடுமையான உழைப்பு இருந்தால், யாராக இருந்தாலும், நல்ல பதவிக்கும், உயா்ந்த இடத்துக்கும் வந்து விடலாம். குஜராத்தில் தேநீா் விற்பனை செய்தவா்தான் பிரதமா் மோடி. கடுமையான உழைப்பு, விடா முயற்சி மூலம் பிரதமராக உயா்ந்தவா்.
இதேபோல, கும்பகோணத்தில் சிவாஜி ரசிகராக இருந்த ஆட்டோ ஓட்டுநா் சரவணன் இப்போது மாநகராட்சி மேயராக உயா்ந்துள்ளாா். இவா்களைப் போன்று ஒவ்வொருவரும், தனது உழைப்பில் கவனம் செலுத்தி லட்சியத்தோடு வாழ வேண்டும் என்றாா் ராம்குமாா்.
சிவாஜி ரசிகா் மன்ற நிா்வாகி சிவாஜி சேகா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.