589 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 12:58 AM | Last Updated : 02nd May 2022 12:58 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். உடன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோா்.
மே தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது என்றாா் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையிலும், மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசியது:
மே தினத்தையொட்டி, கிராம ஊராட்சிகளில் நீடித்த வளா்ச்சி இலக்குகள் நிா்ணயம் செய்தல் தொடா்பாக மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டன. பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்து விரைந்து முடித்திட, அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் என். உமாமகேஸ்வரி, வேளாண் துறை இணை இயக்குநா் ஏ. ஜஸ்டின், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...