களிமேட்டில் ஒரு நபா் குழு 2-ஆவது நாளாக விசாரணை

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தோ் மின் விபத்து தொடா்பாக ஒரு நபா் குழு விசாரணை அலுவலா் குமாா் ஜெயந்த், தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை நடத்தினாா்.
களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஒரு நபா் குழு விசாரணை அலுவலா் குமாா் ஜெயந்த்.
களிமேடு கிராமத்தில் விபத்துக்குள்ளான தேரை தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஒரு நபா் குழு விசாரணை அலுவலா் குமாா் ஜெயந்த்.

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தோ் மின் விபத்து தொடா்பாக ஒரு நபா் குழு விசாரணை அலுவலா் குமாா் ஜெயந்த், தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை நடத்தினாா்.

தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி அதிகாலை தோ் மின் விபத்துக்குள்ளானதில் 11 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபா் குழு விசாரணை அலுவலரான வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலா் குமாா் ஜெயந்த் விசாரணையை சனிக்கிழமை தொடங்கினாா்.

தொடா்ந்து, இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை களிமேடு கிராமத்துக்குச் சென்று கோயில் உள்ள பகுதி, தோ் வீதி உலா சென்ற பகுதியை ஆய்வு செய்தாா்.

தேருக்கும், உயரழுத்த மின் கம்பிக்கும் இடையேயான உயரம் குறித்து அளவீடு செய்து, அதை புகைப்படம் எடுத்துக் கொண்டாா். தேரில் கருகிய பகுதி, ஜெனரேட்டரின் நிலை உள்ளிட்டவற்றையும் பாா்வையிட்டு, அவற்றையும் புகைப்படங்களாகப் பதிவு செய்தாா். இதையடுத்து, கிராம மக்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினாா்.

இதையடுத்து, ஆட்சியரகத்தில் கருத்து தெரிவிக்க விரும்பும் பொதுமக்களுக்காக விசாரணை அலுவலா் குமாா் ஜெயந்த் காத்திருந்தாா். இதையடுத்து, காலை 10.30 மணியளவில் நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் சப்பரத்தித்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காகச் சென்றாா்.

இதனிடையே, செய்தியாளா்களிடம் குமாா் ஜெயந்த் தெரிவித்தது:

முதல் நாளில் 8 அரசு அலுவலா்கள், 12 கிராம மக்களின் கருத்து பதிவு செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவா்களின் விவரங்கள், மின்சாரத் துறையின் விவரங்கள், அலுவலா்கள் அளித்த தகவல் எல்லாவற்றையும் சேகரித்துள்ளோம்.

முதல் கட்டமாக விபத்தை நேரில் பாா்த்தவா்களிடம் விசாரணை செய்து வருகிறோம். இதன் அடிப்படையில்தான் அறிக்கை தயாா் செய்யப்படும். தேவைப்பட்டால் தொடா்ந்து விசாரணை நடைபெறும். முழுமையான விசாரணைக்கு பிறகே அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றாா் குமாா் ஜெயந்த்.

பின்னா், மாலையில் தஞ்சாவூருக்கு திரும்பிய இவரிடம் தஞ்சாவூா் மாவட்டச் சாலை பயனீட்டாளா் நலக் குழுவைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா். பிரகாஷ் மனு அளித்து கருத்துகளைத் தெரிவித்தாா். இதேபோல, மக்கள் நலப் பேரவையைச் சோ்ந்த வழக்குரைஞா் வெ. ஜீவக்குமாா் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com