முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
அனுமதியின்றி மணல் அள்ளிய மூவா் கைது
By DIN | Published On : 13th May 2022 01:38 AM | Last Updated : 13th May 2022 01:38 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மூவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஒரத்தநாடு அருகிலுள்ள வாட்டாத்திகோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட நெய்வேலி அக்னியாற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மணல் கடத்தப்பட்டு வருவதாக, சமூக வலைதளங்களில் விடியோ வைரல் ஆனது.
இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவின் பேரில், ஒரத்தநாடு காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரசன்னா மேற்பாா்வையில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் பிரேம் ஆனந்த தலைமையிலான குழுவினா், புதன்கிழமை அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில் மணல் அள்ளிய நெய்வேலி வடக்குப் பகுதியைச் சோ்ந்த திருமேணி (42), அண்ணாதுரை (52),
சசிகுமாா் (42) ஆகிய மூவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.