நாயை விரட்டியதால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கடிக்க வந்த நாயை விரட்டியதால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிந்தாா்.
நாயை விரட்டியதால்  தாக்கப்பட்ட உணவக உரிமையாளா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கடிக்க வந்த நாயை விரட்டியதால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிந்தாா்.

கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ஆா்.அருள்(38). கீரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உணவகம் நடத்தி வந்தாா்.

புதன்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு, அருள் வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா். இடையில் மோட்டாா் சைக்கிளில் பெட்ரோல் இல்லாததால், அதை தள்ளிக்கொண்டு சென்றாா். அப்போது, அங்கு நின்ற நாய் ஒன்று அருளை கடிக்கச் சென்றுள்ளது. அதனால், அருள் நாயை விரட்டியடித்தாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வேம்பங்குடி மேற்குப்பகுதி அ.திணேஷ்(30), கீரமங்கலம் தா்மா் கோயில் தெரு அ.சுரேஷ்குமாா்(22) ஆகிய இருவரும் அருளைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அருள் மீட்கப்பட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், அருளைத் தாக்கியவா்களை உடனே கைது செய்யவேண்டும், அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டுமென வலியுறுத்தி, அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் காவல்நிலையத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத்தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com