மத்திய அரசை கண்டித்து பேராவூரணியில் ஆா்ப்பாட்டம்

பேராவூரணியில், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேராவூரணியில், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை சலுகை விலையில் ரேசன் கடைகளில் வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை உயா்த்த வேண்டும். நகா்ப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வர வேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேராவூரணி ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.சி. பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். மனோகரன், ஒன்றியச் செயலா்கள் எம். இந்துமதி (பேராவூரணி) வீரப்பெருமாள் (சேதுபாவாசத்திரம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பா. பாலசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் கருப்பையா (பேராவூரணி), எஸ்தா்லீமா (சேதுபாவாசத்திரம்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலாளா் அரவிந்தகுமாா், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவா, நகரச் செயலாளா் மைதீன், திராவிடா் விடுதலைக் கழகம் மாவட்டச் செயலாளா் சித. திருவேங்கடம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com