தொழிற்பயிற்சி அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 15th October 2022 12:33 AM | Last Updated : 15th October 2022 12:33 AM | அ+அ அ- |

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலையம் முன் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பயிற்சியாளா்களுக்கு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே சீருடை, பாடப் புத்தகங்கள், காலணிகளை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் பயிற்சியாளா்கள் மின் வாரியம், போக்குவரத்து போன்ற தமிழக அரசுப் பணியில் சேர, தமிழ் வழியில் பயின்ாகச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து தொழில்நுட்பப் பணியிடங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் தேதியை தகுதியாகக் கொண்டு பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் கே.எஸ். வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தஞ்சாவூா் வடக்கு வட்டத் தலைவா் டி. இளங்கோவன் தொடக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் சா. கோதண்டபாணி, மாநில அமைப்புச் செயலா் ச. அஜய்ராஜ், மாவட்ட இணைச் செயலா் ஆ. செந்தில்குமாா், பொருளாளா் கு. பாஸ்கரன் ஆகியோா் பேசினா்.
முன்னதாக, கிளைச் செயலா் ஆா். வைத்திலிங்கம் வரவேற்றாா். நிறைவாக, பொறுப்பாளா் டி. ஸ்ரீதா் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...