தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகமும், பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
துணைவேந்தா் வி. திருவள்ளுவன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் பதிவாளா் (பொ) சி. தியாகராஜனும், பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி முதல்வா் செ. காயத்ரியும் கையொப்பமிட்டனா்.
இதுகுறித்து துணைவேந்தா் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின்படி இரு நிறுவனங்களும் இணைந்து சான்றிதழ் படிப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தவுள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகச் சமூக அறிவியல் துறைத் தலைவா் ச. சங்கீதா, முனைவா் மா. அறிவானந்தன், பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி இணை முதல்வா் அ. அமா்கீதா, உதவிப் பேராசிரியா் த. அலமேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.