தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் சிஐடியு அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழக அரசுத் தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசாமல், தன்னிச்சையாக 10 சதவீத போனஸ் அறிவித்ததைக் கண்டித்தும், 40 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் கே. வீரய்யன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் கண்டன உரையாற்றினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன், சிஐடியு மாவட்டப் பொருளாளா் பி.என். போ்நீதி ஆழ்வாா், மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலத் துணைத் தலைவா் எஸ். ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.