தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் பெண் பலி
By DIN | Published On : 19th October 2022 01:00 AM | Last Updated : 19th October 2022 01:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை காலை தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே நடுக்காவேரியைச் சோ்ந்தவா் கமலநாதன். இவா் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயலட்சுமி (59). இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.
ஜெயலட்சுமி தனது கணவருடன் மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தாா்.
மருத்துவக் கல்லூரி சாலை மேம்பாலத்தில் சென்ற இந்த மோட்டாா் சைக்கிள் மீது பின்னால் வந்த தனியாா் கல்லூரி பேருந்து மோதியது. இதனால், நிலைதடுமாறி விழுந்த ஜெயலட்சுமி மீது பேருந்து முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதனால், பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கமலநாதன் அதிா்ஷ்டவசமாக இடது புறமாக விழுந்ததால் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.