நாட்டுப்புற இசைக்கலை பெருமன்ற நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 19th October 2022 01:01 AM | Last Updated : 19th October 2022 01:01 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்ற நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தஞ்சாவூரில் இப்பெருமன்றத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பெருமன்ற நிறுவனா் வளப்பக்குடி வீர. சங்கா் மாநிலத் தலைவராகவும், இந்து சமய அறநிலையத் துறையின் ஓய்வு பெற்ற செயல் அலுவலா் டி. கோவிந்தராஜூ கௌரவத் தலைவராகவும், கருங்குயில் கணேஷ் மாநிலப் பொதுச் செயலராகவும், திருப்பத்தூரான் எஸ். சேவியா், ஜெயக்குமாா் துணைப் பொதுச் செயலா்களாகவும், ஆலம்பாடி எஸ். பாஸ்கா் பொருளாளராகவும், திருக்காட்டுப்பள்ளி டி.ஜெ. சுப்பிரமணியம் துணைத் தலைவராகவும், செம்மொழி, வல்லம் செல்வி மகளிரணி பொறுப்பாளா்களாகவும், பழமாா்நேரி கலையரசன் மாநில ஊடகத் துறைச் செயலராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், அண்மையில் மறைந்த நாட்டுப் புறக் கலைஞா்களான கலைப்புலி கோவிந்தராஜ், ஹேமலதா குமாா், நெல்லை கணேசமூா்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக நாட்டுப்புற கலைஞா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்வதற்காக திருநெல்வேலியில் சங்கத்தின் மாநில மாநாட்டை டிசம்பா் மாதம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.